கன்னியாகுமரி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 5 ஆண்டுகளில் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் குறித்து நாகர்கோவிலில் கணக்கீடு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
மாவட்டத்தில் லெமூர் கடற்கரை, சங்குத் துறை, கன்னியாகுமரி கடற்கரை, முட்டம் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, மேலும் பீச்சில் உள்ள பூங்காக்கள் உட்பட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் சென்று புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது.
தனியார் விடுதிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு பொறுப்பு உள்ளது. கொண்டாட்டங்களின் போது சக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும். தனியார் விடுதிகளில் நடைமுறையில் உள்ள அனுமதியின் படி புத்தாண்டு கொண்டாடலாம்.