குமரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி சிக்குபவர்களிடம் அபராதம் வசூலிக்க இ - செல்லான் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கருவியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் 21 காவல்நிலைய ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.
சாலை வதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க புதிய முறை! - Traffic Rules Violators
கன்னியாகுமரி: வாகன வழக்குகள் தொடர்பாக அபராதம் வசூலிக்க இ - செல்லான் முறை காவல்நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சாலை விதிகளை மீறி சிக்குபவர்கள், தங்களின் டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு மூலம் அதற்குரிய அபராதத் தொகையை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையிடம் நேரடியாக பணம் கொடுத்து அபராதத்தை கட்டுவதை தவிர்க்கும் வகையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் இல்லாதவர்கள் அதற்குரிய ரசீதை பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் அதற்குரிய அக்கவுண்டில் பணத்தைச் செலுத்தலாம்.
மேலும், மூன்று முறைக்குமேல் இதுபோன்ற வழக்கில் சிக்கி பணம் செலுத்துபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.