இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பேரிடர் மேலாண்மை, இன்னல்கள் தொடர்பான விபரங்களை அறிய தமிழ்நாடு அரசால் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு, "TN SMART " என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புயல், வெள்ளத்தில் இருந்து காத்து கொள்ள புதிய செயலி!
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் வடநேரே
இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி வாயிலாக புயல், கனமழை, வெள்ளம், பேரிடர் தொடர்பான எச்சரிக்கை, மழை அளவு, காலநிலை உள்ளிட்ட அனைத்து பேரிடர் நிகழ்வுகளையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் பொதுமக்கள் பேரிடரில் இருந்து முன்னெச்சரிக்கையாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என கூறப்பட்டுள்ளது.