தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 1, 2020, 5:02 PM IST

ETV Bharat / state

கன்னியாகுமரியில் புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் தொடக்கம்
இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் 150க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் குறைவான அளவில் மருத்துவமனையில் இருந்தது.

இதனால் கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கும்படி மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதன்படி அரசும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்குவதாக உறுதியளித்தது.

இந்நிலையில், முதல்கட்டமாக அரசு இரண்டு அம்புலன்ஸ் வாகனங்களை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 1) மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அரசு வழங்கிய இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தனர்.

மேலும், மீதமுள்ள ஒரு அம்புலன்ஸ் வாகனத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்மா ஆம்புலன்ஸ் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும்

ABOUT THE AUTHOR

...view details