தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட நெல்லை  மீனவர்கள்! - கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்தை முற்றுகையிட்ட நெல்லை  மீனவர்கள்

கன்னியாகுமரி: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை, 200க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்ட மீனவர்கள் கடல்மார்க்கமாக வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

kanyakumari

By

Published : Oct 1, 2019, 6:57 AM IST

கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீனவர்களுக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இடிந்தகரை, கூத்தன்குழி மீனவர்களுக்கும் கடலில் மீன் பிடிப்பதில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டுவந்து.

இந்நிலையில், நெல்லை மாவட்ட மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் படகுகளில் கடல்மார்க்கமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான காவலர்கள் துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் கடலோர காவல்படையினரால் நெல்லை மீனவர்கள் துறைமுகத்திற்குள் நுழையாமல் தடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மீனவர் சங்க பிரதிநிதி மைக்கேல், 'நெல்லை மாவட்ட மீனவர் ஒருவர், சின்னமுட்டம் துறைமுகம் வந்து மீன்களை வாங்கி விற்பனை செய்துவந்தார்.

வாங்கிய மீன்களுக்கு அவர் பணம் தரவில்லை. இதனால் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தோம். இதை அவர் நெல்லை மீனவர்களிடம் வேறுவிதமாக கூறி போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்'. இவ்வாறு கூறினார். மேலும், கடலோர காவல்படையினரால் நெல்லை மீனவர்கள் திருப்பி அனுப்பட்டனர்.

இதையும் பார்க்க:

சிறிய மீன்பிடித் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டது ஆணை - மீனவர்கள் மகிழ்ச்சி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details