சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம்(அக்.17) தொடங்கியது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் சங்கம் சார்பில் கோயில் கொலு மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் கொலு வைக்கப்பட்டது.
நவராத்திரி விழாவின்போது, தினமும் ஒவ்வொரு அரசு துறை சார்பில் பகவதி அம்மன் கோயிலில் நிகழ்வு நடைபெறும். அப்போது பகவதி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் கோயில் உட்பிரகாரத்தில் மூன்று முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறும்.
வெள்ளி கலைமான் வாகனத்தில் அருள்பாலிக்கும் பகவதி அம்மன்! திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (அக். 18) குமரி மாவட்ட வணிக வரித்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கமாக, இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர். ஆனால் தற்போது குறைந்தளவில் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதையும் படிங்க...அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை - ஸ்டாலின்