தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுதிறனாளிகளை மணப்பவர்களுக்கு அரசு வேலை; மாற்றுதிறனாளிகள் கோரிக்கை - மாற்றுதிறனாளிகள் கோரிக்கை

கன்னியாகுமரி: மாற்று திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் மாற்றுதிறனாளிகளை மணந்து கொள்பவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மாற்று திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

handicapped day
handicapped day

By

Published : Dec 4, 2019, 6:59 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்று திறனாளிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் குமரி வீல் சேர் அறக்கட்டளை தலைவர் வசந்தகுமார், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில், மாற்று திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அவர்களை மணந்து கொள்பவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அனைவருக்கும் சீராக கிடைத்திட செய்ய வேண்டும்.12ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல அரசு வேலைக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்திட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details