சர்வதேச சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சர்வதேச தரத்தில் கன்னியாகுமரியை உயர்த்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் சாலையின் தொடக்கப் பகுதியில், 50 லட்சம் ரூபாய் செலவில் 125 அடி உயர கொடிக்கம்பத்தின் மீது பெரிய அளவிலான தேசியக் கொடியை பறக்கவிட திட்டமிடப்பட்டு அதற்கான அதனை அடிக்கல் நாட்டப்பட்டது. பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எம்.பி. விஜயகுமார் இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
125 அடி உயரத்தில் பெரிய அளவில் பறக்கவுள்ள இந்திய தேசியக் கொடி - national flag
கன்னியாகுமரி : குமரியில் இருந்து காஷ்மீர் செல்லும் சாலையில் 125 அடி உயரத்தில் பறக்கவுள்ள தேசியக் கொடிக்கான கம்பத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் அடிக்கல் நாட்டினார்.
125 அடி உயரத்தில் பெரிய அளவில் பறக்கவுள்ள இந்தியா தேசிய கொடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்திலேயே எந்த ஒரு பகுதியிலும் முக்கடல் சந்திக்கவில்லை, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் மட்டுமே முக்கடல் சங்கமம் உள்ளது . இதனை உலக அதிசயங்களில் ஒன்றாக்கி எட்டாவது அதிசயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளேன், மேலும் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்திலும் இதைபற்றி பேசுவேன் என்று கூறினார்.