கன்னியாகுமரி மாவட்டம் நரிக்குளம் பகுதியில் 29.18 கோடி ரூபாய் செலவில் சாலை மற்றும் பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தை திறந்துவைத்தார். இந்த பாலத்தில் தற்போது போக்குவரத்து நடைமுறையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இந்த பாலத்தை பலப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள கரைப்பகுதியில் விரிசல் எற்பட்டு கற்கள் குளத்திற்குள் விழுந்துள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் நரிக்குளம் நிரம்பிவருகிறது. இந்த நிலையில் பாலப்பகுதியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் பலவீனம் அடைந்து இடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இடியும் நிலையில் நரிக்குளம் பாலம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை - மத்திய மாநில அரசு
கன்னியாகுமரி: நரிக்குளம் பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட பாலத்தின் கான்கிரீட் உடைந்து இடியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நரிக்குளம் பாலம் -
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ’இந்த பாலம் அமைக்கும்போது தரமற்ற முறையில்தான் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மழையால் பெரிய பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்தால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.