நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடப்போவது யார் என கடந்த சில நாட்களாகவே கேள்வி எழுப்பப்பட்டுவந்தது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு! - Congress Candidate
கன்னியாகுமரி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Rubi
ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என இழுபறி நீடித்த வந்த நிலையில் தற்போது வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.