கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்துகள் ஓடாமல் இருந்த வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி சந்தைக்கு வரும் அனைவரும் இந்தக் கூடம் வழியாக உள்ளே நுழைய வேண்டும். இந்தக் கூடத்திற்குள் நுழைந்ததும் தானியங்கி முறையில் உள்ளே நுழையும் பொதுமக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும். இதன் மூலம் கரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.