தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விரிவாக்கப் பணிக்காக நூற்றாண்டு பழமையான கோயில் இடிப்பு! - நாகர்கோவில் ரயில் நிலையம் விரிவாக்கப் பணி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் செல்லும் சாலை விரிவாக்கத்திற்கு வேண்டி, நூறு ஆண்டுகள் பழமையான மாகாளி அம்மன் கோயில் இடிக்கப்பட்டுள்ளது.

nagercoil railway road broaden project corporation demolished 100 years old temple
ரயில் நிலையம் பணிக்கு நூறாண்டு பழமையான கோயில் இடிப்பு

By

Published : Dec 12, 2019, 9:34 PM IST

குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சாலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் எழுப்பப்பட்டு அப்பகுதியினரால், உஜ்ஜையினி மாகாளி மற்றும் மீனாட்சியம்மன் தெய்வச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே பணிகளுக்காக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால், இந்தச் சாலையில் அமைந்துள்ள மாகாளி அம்மன் கோயில் மாநகராட்சி அலுவலர்களால் இடித்து அகற்றப்பட்டது. இந்தக் கோயிலின் உள்ளே இருந்த சிலைகள் வேறு இடத்தில் மாற்றப்பட்டு அங்கு பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் ரயில் நிலையம் பணிக்காக நூற்றாண்டு பழமையான கோயில் இடிப்பு

இதையும் படியுங்க: கோயில் அர்ச்சகர் கீழே விழுந்து உயிரிழப்பு...!

ABOUT THE AUTHOR

...view details