பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை நாடு முழுவதும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு நாள்: குமரியில் பலத்த பாதுகாப்பு - Police protection in Kanyakumari
கன்னியாகுமரி: நாளை பாபர் மசூதி இடிப்பு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. இன்றும் நாளையும் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால், அது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையம் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.