தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்! - nagercoil police

நாகர்கோவில்: கோயில்விளை பகுதியில் பள்ளி அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nagercoil people protestes for opening tasmac

By

Published : Aug 17, 2019, 11:37 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோவில் விளை பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியில் பள்ளிக்கூடம், மைதானம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

எனவே, இந்த பகுதியில் டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டால் பொது மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் இடையூறாக இருக்கும் என கூறி டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details