தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்துக் கல்லூரியில் வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - நாகர்கோயில் இந்துக்கல்லூரி வள்ளலார் பிறந்தநாள் விழா

குமரி: நாகர்கோவிலில் உள்ள இந்துக் கல்லூரியில் வள்ளலார் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ராமலிங்க அடிகளின் 197ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

vallalar birthday

By

Published : Oct 5, 2019, 8:08 PM IST

'எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்', என்றும் 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றும் கூறி, சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று கூறிய வள்ளலாருடைய 197ஆவது பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

அதில் கலந்துகொண்ட நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், வள்ளலார் படத்தை திறந்து வைத்தார்.

வள்ளலார் பிறந்தநாள் கொண்டாட்டம்

இதன் பின்னர் வள்ளலாளர் பேரவைத் தலைவர் பத்மோந்திரா சாமிகள், வள்ளலாளர் படத்திற்கு மலர் தூவியும், ஜோதி ஏற்றியும் வணங்கினார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் வள்ளலாரின் பாடல்கள் பாடப்பட்டன, மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:இத்தாலியில் காட்சிப்படுத்தப்படவுள்ள பழங்குடி மூதாட்டி ஓவியம்!

ABOUT THE AUTHOR

...view details