கன்னியாகுமரி:நாகர்கோவில் அருகேயுள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு உணவருந்த வசதியாக மருத்துவமனை வளாகத்தினுள்ளே அம்மா உணவகம் மற்றும் சில தனியார் உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் பாலாஜி உணவகம் நடத்தி வருகிறார்.
இந்த உணவகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்த யூஜின் தாஸ்(39), வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த அஜீத் (26), ஒழுகினசேரியை சேர்ந்த ஆனந்தராஜ் (31) மற்றும் கடியப்பட்டணத்தை சேர்ந்த பனியடிமை (41) ஆகிய 4 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களை பார்க்க வந்திருந்தனர்.
அப்போது பாலாஜி உணவகத்தில் மீன் சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் நான்கு பேருக்கும் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக அம்மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டனர்.