தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு நூற்றாண்டை கடந்த பள்ளியின் ஆண்டுவிழா - பள்ளிக்கு 200 வது ஆண்டு விழா

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பள்ளி தொடங்கப்பட்டு இரு நூற்றாண்டை கடந்த நிலையில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

200years_celebration
200years_celebration

By

Published : Dec 5, 2019, 1:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டு தற்போது தென்னிந்திய திருச்சபையின் டயோ சிசன் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.

கல்வி அறிவு குறைவாக இருந்த காலத்தில் தொடங்கபட்ட இந்தப் பள்ளி இரு நூற்றாண்டை நிறைவு செய்த பெருமையைப் பெற்றுள்ளது. நேற்று பள்ளியின்ஆண்டுவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் குமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

200 வது ஆண்டு விழா

பள்ளி ஆசரியர்கள், மாணவியர்கள் ஏராளமனோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சி விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்தது. தினசரி காலையில் வகுப்புகள் தொடங்கும் முன் அனைத்து அசிரியர்கள் மற்றும் மாணவிகள் பள்ளியில் நடைபெறும் பிராத்தனையின்போது நாட்டு நடப்புகள் குறித்து அன்றைய பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகளின் தலைப்பு செய்திகளை அறிவிக்கும் முறை இப்பள்ளியில் தினசரி கடைபிடிக்கப்பட்டு வருவதாக பள்ளியின் தாளாளர் திருமதி சைலாமேரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிக்க: 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய தருமபுரி ஏரி!

ABOUT THE AUTHOR

...view details