கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் நேற்று (ஜூலை 26) கரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.