தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலரை ஒருமையில் பேசிய நாகர்கோவில் திமுக வேட்பாளர்! - Nagercoil DMK candidate spoke Indecently with a female police

கன்னியாகுமரி: வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியை ஆய்வு செய்ய சென்ற திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் அங்கிருந்த பெண் காவலரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரேஷ்ராஜன் போலீசை ஒருமையில் பேசியதால் பரபரப்பு  திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன்  பெண் காவலரை ஒருமையில் பேசிய நாகர்கோவில் திமுக வேட்பாளர்  நாகர்கோவில் திமுக வேட்பாளர்  Nagercoil DMK candidate  DMK candidate in Nagercoil who spoke in unison with a female guard  DMK candidate Suresh Rajan  Nagercoil DMK candidate spoke Indecently with a female police  DMK Candidate Female Police Issue
DMK Candidate Female Police Issue

By

Published : Apr 6, 2021, 7:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக சுரேஷ்ராஜன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று (ஏப். 6) காலை 7 மணி முதல் நாகர்கோவில் தொகுதியில் வாக்குப் பதிவு தீவிரமாக நடைபெற்றது.

திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஆய்வு செய்வதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சுரேஷ்ராஜனை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ்ராஜன் பெண் காவலரை ஒருமையில் பேசியுள்ளார்.

பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுக வேட்பாளர்

இதையடுத்து, பெண் காவலரும் சுரேஷ்ராஜனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சுரேஷ் ராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார். நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் பெண் காவலரை ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்த கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details