கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சமீப நாள்களாக சாலைகளின் இரு பக்கமும் நிறுத்தப்பட்டு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
சாலையை மறித்து வாகனங்கள் நிறுத்தம் - நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி: நாகர்கோவில் நகர பகுதியில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் மாநகராட்சி ஆணையர், காவல்துறை அலுவலர்கள் நகரப் பகுதியில் ஆய்வு நடத்தினர்.
kanniyakumari district news
இதனை தடுக்க இன்று(அக். 31) நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், நாகர்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் அலுவலர்கள் நாகர்கோவில், மணிமேடை சந்திப்பு மற்றும் கோட்டார் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர் இதுபோன்ற சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தேவையான இடங்கள் கையகப்படுத்துதல் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின் அதற்குரிய செயல்திட்டம் வகுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.