நாகர்கோவில் நகராட்சி சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் ஆணையராக சரவணக்குமார் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார்.
இவர், நாகர்கோவில் நகரப் பகுதிகளில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவந்தார். குறிப்பாக, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு அகற்றம், குடிநீர் பிரச்னைக்கு போதிய எதிர்காலத் திட்டம் வகுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இவரின் இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
குமரி மாவட்டம் முழுவதும் கரோனா அதிக அளவில் பரவிவரும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியின் செயல்பாடு தனித்துவமானதாக விளங்கிவருகிறது.