கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தற்போது இந்தியாவிலேயே மிகப் பழமையான சர்க்கஸ்களில் ஒன்றான ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் பல்வேறு வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சர்க்கஸ் காட்சியில் சுமார் 80 கிலோ எடை கொண்ட கெட்டில் பெல் எனப்படும் உடற்பயிற்சி கருவியை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சாகச வீரர் ஒருவர் தனது கைகளாலும் , பல்லால் கடித்து தூக்கி சாதனை நிகழ்த்தி வந்தார். அப்போது திடீரென அந்த காட்சியின் போது, இந்த ஊரில் இந்த பளுவை தூக்குவதற்கு யாராவது உள்ளீர்களா என சவால் விடுத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே ஜேம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த பிரேவ் மேன் ஹார்ட் என்ற கல்லூரி மாணவர் தனது குடும்பத்துடன் சர்க்கஸ் பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரமாக சர்க்கஸ் வீரர் சவால் விடுத்ததை பொறுக்க முடியாமல் சவாலை ஏற்ற மாணவர் முதல் முயற்சியிலேயே அந்த 80 கிலோ கருவியை தூக்கி அசத்தினார். இதனை கண்ட மக்கள் கைதட்டி பாராட்டினர்.
இது குறித்து மாணவரிடம் பேசிய போது, சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மற்றும் பளுதூக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நான் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்று வருகிறேன். விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது, எனது ஃப்ரீ டைமில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.