தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பாலக குலாப் ஜாமுனில் பூஞ்சை... வாடிக்கையாளர் அதிர்ச்சி... - வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆவின் பாலகத்தில் வாங்கிய குலாப் ஜாமூனில் பூஞ்சைகள் இருந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் உரிய முறையில் ஆய்வு செய்து தரமற்றப் பொருட்களை அகற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 19, 2022, 12:31 PM IST

கன்னியாகுமரி:தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் இனிப்பு கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் ஆவின் பாலகங்களிலும் பால் பொருட்கள் மட்டும் இன்றி, பல்வேறு உணவுப் பொருட்களும் விற்பனை சூடு பிடித்துள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த சாஜன் என்பவர், நாகர்கோவில் ஆவின் பாலகத்தில் குலாப் ஜாமூன் பாக்கெட்டை வாங்கினார். அந்த பாக்கெட்டை வீட்டிற்கு சென்று பிரித்த பார்த்தபோது, குலோப் ஜாமூனில் பூஞ்சைகள் படர்ந்து காணப்பட்டுள்ளது.

காலாவதி தேதி முடியும் முன்பே பூஞ்சைகள் படர்ந்துள்ளன. இதுகுறித்து ஆவின் பால உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். அதோபோல போதுமான கையிருப்புகளை புதிதாக வாங்காமல், வாங்கி நீண்ட நாள்களாக வைக்கப்பட்டிருக்கும் பொருள்களையே விற்பனை செய்துவருவதாகவும் சாஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இனிப்பில் டால்டாவா? - மறுப்பு தெரிவித்த ஆவின் நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details