கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மத்திய பகுதியில் வலம்புரி விளையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வலம்புரி விளை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மழைக்காலங்களில் வீசும் கடுமையான துர்நாற்றம், இப்பகுதியில் இருந்து வரும் புழு பூச்சிகளால் இம்மக்கள் வேதனை அடைந்துவருகின்றனர்.
இதனால் இந்த வலம்புரிவிளை குப்பை கிடங்கை மூட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஏராளமான வாகனங்கள் இங்கு வந்து குப்பைகளை கொட்டின. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.