தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை ஏமாற்றிய காசியை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு! - பெண்களை ஆபாசமாக படம்பிடித்து ஏமாற்றிய காசியின் தற்போதைய நிலை

கன்னியாகுமரி: பெண்களிடம் பழகி அவர்களை தவறாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kasi
kasi

By

Published : May 5, 2020, 10:12 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் காசி, அவ்வப்போது பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார். பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்கில் இருப்பது போன்ற போட்டோக்கள், வீடியோக்களையும் பதிவிட்டு 70க்கும் மேற்பட்ட பெண்களை காதலித்துள்ளார்.

அந்தப் பெண்களை மயக்கும் விதமாக காசி அவ்வப்போது ஃபோட்டோக்கள், டிக் டாக் வீடியோக்கள் என பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவர் இளம்பெண்களுடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை வீடியோவாக பதிவு செய்து பணம் சம்பாதித்துள்ளார். இதேபோல் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவரிடம் பழகி அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.

அப்போது, மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைதாகி நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டார் காசி. இந்நிலையில், பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் உண்மை நிலையை தெரிந்துகொள்ளும் வகையில், காசியை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து காசியை பலத்த காவல் துறை பாதுகாப்புடன் நேற்று நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, காசியை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'பெட்ரோல் டீசல் மதிப்பு கூட்டு வரியை திரும்ப பெறுக - ஸ்டாலின்'

ABOUT THE AUTHOR

...view details