கன்னியாகுமரி:நித்திரவிளை அருகே வாவறை பகுதியைச்சேர்ந்தவர் சின்னப்பர்(56). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி தங்கபாய்(51) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வரும் நிலையில் பள்ளியில் படிக்கும் போதே நித்திரவிளை பகுதியைச்சேர்ந்த வருண் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்குமுன் வருணின் குடும்பத்தினர், இவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 1ஆம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளதாக கூறியதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.