கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் சுத்தப்படுத்தாமலும் தேங்கி நிற்கும் மழைநீர், குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தாமலும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துவருகிறது.
குறிப்பாக தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமைந்துள்ள கழிவுநீர் ஓடையை சுத்தப்படுத்தக் கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியும் இதுவரை அதனை சுத்தப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக டெங்கு கொசுக்கள், தொற்று நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த மர்ம காய்ச்சல் இப்பகுதிகளில் தற்பொழுது மிக வேகமாகப் பரவிவருகிறது.