தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைரலாகும் கரோனா விழிப்புணர்வு பாடல் - கரோனா வைரஸ்

கன்னியாகுமரி: 'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்ற சினிமா பாடலின் மெட்டில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு பற்றி பாடிய இசைக்குழுவினரின் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் கரோனா விழிப்புணர்வு பாடல்
வைரலாகும் கரோனா விழிப்புணர்வு பாடல்

By

Published : Apr 11, 2020, 2:44 PM IST

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் பலர், பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், கரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

வைரலாகும் கரோனா விழிப்புணர்வு பாடல்

குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற நாதஸ்வர கலைஞர் ஒருவர் தங்கள் குழுவினருடன், 'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்ற சினிமா பாடலின் மெட்டில் தாங்கள் எழுதிய

கரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் ஒன்றை இசையுடன் பாடி வெளியிட்டுள்ளார். இந்த விழிப்புணர்வு பாடல் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:கன்னியாகுமரியில் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச பால்!

ABOUT THE AUTHOR

...view details