தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பள குறைப்பை ரத்து செய்யகோரி போராட்டம் - Municipality Employees Association

கன்னியாகுமரி: பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது.

Hunger strike
Hunger strike

By

Published : Oct 24, 2020, 2:55 PM IST

தமிழ்நாட்டில் பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர ஊதியம் ரூ.1,900இல் இருந்து ரூ.1,300ஆக குறைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர். சம்பள குறைப்பு காரணமாக ஒரு ஊழியருக்கு ரூ.7,000 வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், குடிநீர் திட்ட பணியாளர் சம்பளம் குறைப்பால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details