கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து டீ கடைகள், ஹோட்டல்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடாது, டீ கடைகளில் பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைப் பெரும்பாலான ஹோட்டல்கள், டீ கடை உரிமையாளர்கள் பின்பற்றி கடை நடத்தி வருகின்றனர். எனினும் ஒரு சில இடங்களில் கட்டுப்பாடுகளை மீறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று(மே 20) நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்கள் டீ கடைகளில் கப்புகளில் டீ விநியோகம் செய்யப்படுகிறதா?, ஹோட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்களா? என்பதை கண்காணித்து வந்தனர். அப்போது நாகர்கோவில் அடுத்த செட்டிக்குளம் பகுதியில் சாலையோரத்தில் இரண்டு டீ கடைகளில் வாடிக்கையாளர்கள் டீ யை கிளாஸில் அருந்தியபடி இருந்தனர்.