நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு ஏழு மணிக்கு மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர்.
பிரதமர் பதவியேற்பு விழா.... பாஜக துணைத் தலைவருக்கு அழைப்பு - பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா
கன்னியாகுமரி: பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவரான எம் ஆர் காந்திக்கு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
mr gandhi
இந்நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர்களில் ஒருவரும், குமரி மாவட்ட மூத்த பாஜக தலைவருமான எம்.ஆர் காந்திக்கு பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காந்தி இன்று காலை ஆறு மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.