தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் ராகுல் காந்தி ... எம் பி விஜய் வசந்த் - kanyakumari

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரி வருவதாக எம் பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி
குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி

By

Published : Aug 17, 2022, 11:38 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அரசு ஆயுர்வேத கல்லூரிக்கு 300 இருக்கைகளை எம்பி விஜய் வசந்த் நேற்று வழங்கினார்.

இதனையடுத்து அடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி குறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜய் வசந்த், "தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரசு ஆயுர்வேத கல்லூரியான நாகர்கோவில் ஆயுர்வேத கல்லூரிக்கு நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கும் பாதயாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரியில் மாநாடு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது முடிந்த பின்னர் நாகர்கோவில் களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு பாதயாத்திரை நடைபெற உள்ளது" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details