கன்னியாகுமரி மாவட்டம் ஜேம்ஸ்டவுன் அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கலந்துக்கொண்டு 36 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா - விலையில்லா மடிக்கணினி
கன்னியாகுமரி: ஜேம்ஸ்டவுன் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.
laptop
இதனைத் தொடர்ந்து பேசிய எம்.பி. வசந்தகுமார், குமரி மாவட்டத்தின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.