கன்னியாகுமரி வள்ளவிளை பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க 8 படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒரு படகில் சென்ற மீனவர்கள் மட்டும் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் குறித்தும் அவர்கள் சென்ற 7 படகுகள் பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஹெச். வசந்த குமார் எம்.பி. தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மீனவர்கள், 65க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும், அவர்களை உடனடியாக மீட்டுத்தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஹெச். வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை தொடர்ந்து பேசிய ஹெச். வசந்தகுமார் எம்.பி., “இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு கப்பல்கள் மூலம் இந்த மீனவர்களை மீட்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 78 மீனவர்கள் மாயம்!