கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரை தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் தினம் தினம் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தச்சூழலில் சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி வருகின்ற 16ஆம் தேதி களியக்காவிளை, அழகிய மண்டபம், நாகர்கோவில், ஆரல் வாய்மொழி உட்பட ஐந்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகக் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர், கன்னியாகுமரியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து கூட்டாக அறிவித்திருந்தனர்.