தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவருவதற்குத்தான் எம்பிக்கள், அதனை தடுத்து நிறுத்துவதற்கு அல்ல' பாஜக - காங்கிரஸ்

கன்னியாகுமரி: வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவதற்குதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை, அதனைத் தடுத்த நிறுத்துவதற்கு அல்ல என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக பரப்புரை

By

Published : Apr 16, 2019, 9:54 AM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார்.

இதனிடையே, கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமம் பகுதியில் பரப்புரையின் போது பேசிய அவர், நாட்டில் பலருக்குப் பிரதமர் பதவி மீது ஆசை உள்ளதாகவும், அப்பதவிக்கு பத்து பேர் போட்டியிடுவதாகவும் கூறினார்.

ஆனால், மோடியைத் தவிர யாராலும் பிரதமராக முடியாது எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அயராது உழைத்துப் பாடுபட்டவர் மோடி, அவரை திருடன் என விமர்சிக்கிறார் ராகுல் காந்தி. அப்படி ஒரு பக்குவம் இல்லாத ராகுல் எப்படி நாட்டை ஆள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, ஊழல் செய்யாத ஒரு நல்ல மனிதனைக் பெற்றிருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை எனவும் சாடினார். தொடர்ந்து, நாங்குநேரி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டு அவர்களை அப்படியே விட்டுவிட்டு எம்பி பதவிக்குக் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார் என தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் 40,000 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். ஆனால் வசந்தகுமார் வெற்றி பெற்றால் பொன் ராதாகிருஷ்ணன் கொண்டு வந்த திட்டங்களைத் தடுத்து நிறுத்துவேன் எனக் கூறி வருகிறார். நல்ல வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வருவதற்குத்தான் எம்பி தேவையும், தடுத்து நிறுத்துவதற்கு அல்ல என தளவாய் சுந்தரம் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details