தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒருகோடி ரூபாய் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை - Rajya Sabha member Vijayakumar

கன்னியாகுமரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் வழங்கிய தொகுதி நிதியில் வாங்கப்பட்ட மருத்தவ உபகரணங்களை மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒருகோடி ரூபாய் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை
ஒருகோடி ரூபாய் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை

By

Published : Mar 30, 2020, 7:23 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க போதுமான மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடி ரூபாயினை மருந்து, மருத்துவ உபகரண பொருட்கள் வாங்குவதற்காக மருத்துவ கல்லூரி கல்வி நிலைய துறைத் தலைவர் (டீன்) சுகந்தி ராஜாகுமாரியிடம் வழங்கினார்.

ஒருகோடி ரூபாய் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை
இதனையடுத்து, விஜயகுமார் எம்பி வழங்கிய பணத்தில் வாங்கப்பட்ட மருத்துவ உபகரண பொருட்களை மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் விஜயகுமார் எம்பி கலந்துகொண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்ட ஐசியு வென்ட்டிலேட்டர்- 1, மானிட்டர்- 20, பிடியாட்ரிக் வென்டிலேட்டர்- 1, என்ஐவி வென்ட்டிலேட்டர்- 4, ஈசிஜி இயந்திரம்- 5, அல்ட்ராசோனிக் இயந்திரம்-1, உள்ளிட்ட மருத்துவ உபகரண பொருட்களை மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரியிடம் ஒப்படைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details