தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைப்பகுதியில் தீ விபத்து: புகை மூட்டத்தால் மக்கள் அவதி! - People suffer from smoke

கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை மலைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை மலை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை மலை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

By

Published : Mar 4, 2021, 8:59 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சுங்கன்கடை பகுதியில் மலைப்பகுதி அதிகம் உள்ளது. இந்த மலையில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இதனைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கான்கடை மலைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

இந்நிலையில் 3-4ஆம் தேதி இரவு அந்த மலைப் பகுதியில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. பின்னர் இரவு செல்ல செல்ல தீ திடீரென மலை முழுவதும் பரவ ஆரம்பித்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியது. மேலும் இரவு நேரம் என்பதாலும் கடுமையான வெப்பம் காரணமாகவும் தீயணைப்புத் துறையினரால் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை. மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் கிளம்பிய புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவைத் தேர்தல்: குமரியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details