கன்னியாகுமரி மாவட்டம், மேலசங்கரன் குழி பகுதியை சேர்ந்தவர் நாக கிருஷ்ணமணி(42). இவர் தனது மனைவி சுதா மற்றும் மகள் பத்மபிரியா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கோட்டாறு காவல்நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த மினிபேருந்து கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் பலி - Mother, daughter killed
கன்னியாகுமரி: கோட்டாறு காவல்நிலையம் எதிரே இருசக்கர வாகனம் மீது மினிபேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்து
இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சுதா மற்றும் பத்மபிரியா இருவரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.