தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் காதலனுடன் லாங் டிரைவ்; சுமோவில் சடலமாக கிடந்த பெண்.. குமரியில் நடந்தது என்ன? - மணவாளக்குறிச்சி

கன்னியாகுமரியில் காரில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு முன்னாள் காதலுடன் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலனுடன் தாய் தற்கொலை
கள்ளக்காதலனுடன் தாய் தற்கொலை

By

Published : Dec 21, 2022, 10:06 AM IST

Updated : Dec 22, 2022, 8:23 AM IST

கன்னியாகுமரி:மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய சூசைநாதன்(35). இவர் கடியப்பட்டணம் பகுதியில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த திருமணமாகி 2 ஆண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள ஷாமினி என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனிடையே ஷாமினி ஒரு மாதத்திற்கு முன்பு 2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஷாமினியின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் மீட்டு குடும்பத்துடன் சேர்ந்துவைத்தனர். அதன்பின் 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் ஷாமினி குழந்தைகளுடன் வெளியேறியுள்ளார். இந்த முறையும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் உள்ள தேவாலயம் முன்பு டாட்டா சுமோ கார் நின்றுகொண்டிருப்பதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஆரல்வாய்மொழி போலீசார், உயிரிழந்தது ஷாமினி மற்றும் சூசைநாதன் என்பதை கண்டறிந்தனர். இருவரது உடலையும் மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த காரில் 2 குழந்தைகளும் இருந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், நேற்றிரவு (டிசம்பர் 21) குழந்தைகளோடு ஷாமினி மற்றும் ஆரோக்கிய சூசைநாதன் இந்த பகுதிக்கு வந்துள்ளனர். அதன்பின் காரில் இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு, இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பே காதலித்துவந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கணவரை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த நபருக்கு வந்த சோதனை: நடந்தது என்ன?

Last Updated : Dec 22, 2022, 8:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details