கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்(34). கொத்தனாராக உள்ளார். இவரது மனைவி கார்த்திகா(21). இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தையும், சரண் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று (ஏப். 7) கார்த்திகா, தனது கணவரை செல்போனில் அழைத்து சரண் எலிக்காக வைத்த விஷமருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக கூறினார். இதனடிப்படையில் ஜெகதீஷ் வீட்டிற்கு விரைந்து குழந்தையை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் ஆசாரி பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
கன்னியாகுமரியில் காதலனுக்காக பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் கைது! முதல்கட்ட விசாரணையில் குழந்தை விஷப்பொடியை சாப்பிட்டதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் பெற்றோரை காவல்நிலையம் அழைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.
திடுக்கிடும் தகவல்:அப்போது கார்த்திகா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவருடை செல்போனை அழைப்புகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சுனில் என்பவரும் இவரும் அதிகநேரம் பேசியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திகாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், "நானும் சுனிலும் காதலித்தோம். எனக்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரியாமல் அவர் பழகிவந்தார். இதுகுறித்து தெரிந்ததும் பேசுவதை நிறுத்தினார். அவருடன் சேருவதற்காக குழந்தைகளுக்கு விஷம் வைத்தேன். பின்னர் குழந்தை சாப்பிட்டுவிட்டதாக நாடகமாடினேன்" என்று தெரிவித்தார்.
அப்போதுதான் மூத்த குழந்தைக்கும் விஷம் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நல்வாய்ப்பாக மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிட்டதால் உயிர் பிழைத்தது. தற்போது அந்த திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே தாய் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:கொடூரமாக இரண்டு குழந்தைகளை கொன்ற தாய் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்