கன்னியாகுமரி மாவட்டம் வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் கமலபாய் (82). மூதாட்டியான இவரும் இவரது மகள் விமலா சாந்தவும் (67) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நோய் வாய்ப்பட்டு மகள் சாந்தா திடீரென உயிரிழந்தார். இதனால் வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், பத்து காணி பகுதியை சேர்ந்த யுகேந்திரன் என்பவர் சொத்துக்காக மூதாட்டியை வீட்டில் அடைத்து வைத்து சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்து பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் திரண்டனர்.
சொத்துக்காக வீட்டில் அடைக்கப்பட்ட மூதாட்டியை மீட்ட எம்எல்ஏ
கன்னியாகுமரி: வெண்டலிகோடு பகுதியில் சொத்துக்காக 82 வயது மூதாட்டியை வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக உறவினர்கள் திரண்டதால், எம்எல்ஏ மனோ தங்கராஜ் நேரில் சென்று மூதாட்டியை மீட்டார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோ தங்கராஜ், வீட்டை திறக்க முயன்றார். ஆனால், கதவு மூடப்பட்டிருந்ததால் குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் காவல்துறையினர் யுகேந்திரனை அழைத்து வந்து அறையை திறந்து மூதாட்டியை மீட்டனர். இதை தொடர்ந்து மூதாட்டியின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்த யுகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க எம்எல்ஏவும், உறவினர்களும் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.