விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வக் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குடும்ப முறைப்படி காப்புக்கட்டி விரதமிருந்து-வருகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் குடமுழுக்கு திருக்கலச அபிஷேகத்திற்குப் புனிநீர் சேகரித்துவருகிறார். அதன்படி நேற்று பாபநாசத்தில் புனிதநீரைச் சேகரித்தார்.