உலகம் முழுவதும் சர்வதேச மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் நாகர்கோவில் மீனவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தோல்வி பயத்தினால் திமுக தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுத்து வருகிறது. அதேவேளையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கும் தேதியை நீட்டித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும் இணைந்தால், திமுகவின் வாக்குகளைத் தான் பிரிக்க முடியும். அதிமுகவின் வாக்குகளில் கைகூட வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக வாக்கெடுப்பு என்பது ஏற்கக் கூடிய ஒன்று. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் முதலமைச்சரை தேர்வு செய்வது போன்றதுதான் இதுவும். இதில் தவறேதுமில்லை" என்று கூறினார்.
ரஜினி, கமலும் தொட்டு பார்க்கட்டும் -அமைச்சர் ஜெயக்குமார் இதனிடையே, திருமாவளவன் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழ்நாட்டில் சாதி, மத இன அரசியல் எடுபடாது. தினகரன் கட்சி குறித்து கூறுகையில், எதுவோ தேய்ந்து கட்டெறும்பான கதைதான் டிடிவி தினகரன் கதை என்றார்.
இதையும் படிங்க: கேரளாவில் நெகிழி பயன்பாட்டுக்கு விரைவில் தடை.!