கன்னியாகுமரி: கனிம வளங்கள் கொள்ளை, அனுமதியின்றி கல்குவாரிகளை செயல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் மனோதங்கராஜ், ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினர். காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் கனிமவள கடத்தல் தடுப்பு ஆலோசனை கூட்டம் - கனிமவள கடத்தல்
கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமவள கடத்தல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கனிமவள கடத்தல் ஆலோசனை கூட்டம்; கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. குற்றசாட்டால் பரபரப்பு
அப்போது கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ”குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினசரி ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு கருங்கற்கள், மணல் கிடைப்பதில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மத்திய அரசே போதைப்பொருட்கள் அதிகரிக்க காரணம்... அமைச்சர் பொன்முடி...