கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக மணல், கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்
கன்னியாகுமரி: பொய்கை அணை பகுதியில் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 14 டெம்போ, 3 ஜெ.சி.பி. வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Mineral resources smuggling 6 arrested Vehicles confiscated in kumari
இந்நிலையில், பொய்கை அணை பகுதிகளில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் அணை அருகே செம்மண் அள்ளிக் கொண்டிருந்த வாகனங்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது மண் அள்ளிக் கொண்டிருந்த 14 டெம்போக்கள், 3 ஜெ.சி.பி. இயந்திர வாகனங்களை பறிமுதல் செய்த காவலர்கள், மணல் கடத்தில் ஈடுபட்ட ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட்டை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.