தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பகுதியில் வழக்கம்போல் கடைகளும், தங்கும் விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடை நடத்தி வருபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி மிகவும் கலையிழந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.