ரூ.3600 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய தமிழ்நாடு அரசு! - லீலா பாய் இறப்பு
கன்னியாகுமரி: மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5920 கோடி ரூபாயில், 3600 கோடி ரூபாய் செலவிடப்படாமல் மாநில அரசு திருப்பி அனுப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
3600 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய மாநில அரசு!
இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5 ஆயிரத்து 920 கோடி ரூபாயில, 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்படாமல், தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகமாகும்.