கன்னியாகுமரி:மாவட்ட அரசு போக்குவரத்து கழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத்தினர் இன்று நாகர்கோவிலில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பேருந்துகளை வெளியே விடாமல் முடக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள், திமுக அரசு பதவிக்கு வந்ததுமே ஆளுங்கட்சி என்று அத்துமீறலை தொடங்கியுள்ளது. தொழிற்சங்கங்களை முடக்கி வருகின்றனர். திமுக தொழிற்சங்கத்தினர் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கையகப்படுத்தி பிற தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ளனர்.