தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க கோரிக்கை - மீனவர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க ஆட்சியரிடம் மனு

மீன்பிடி தடைக்கால நிவாரணம் கிடைக்காத மீனவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மீனவர்களுக்கு கரோனா நிவாரண நிதி
மீனவர்களுக்கு கரோனா நிவாரண நிதி

By

Published : Jun 18, 2021, 4:57 PM IST

கன்னியாகுமரி: இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

"குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியதிற்குள்பட்ட பள்ளம், அன்னை நகர் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழில் செய்துவரும் இந்த மீனவர்களில் பலருக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை கிடைக்கவில்லை.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
இதில் இரண்டு, மூன்று வருடங்களாக நிவாரணம் கிடைக்காத மீனவர்களும் உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை முறையீடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையீடு செய்து நிவாரணம் கிடைக்காத மீனவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கத் தடை கோரிய வழக்கு

ABOUT THE AUTHOR

...view details